விஜய் தொலைக்காட்சியின்
தொகுப்பாளியான DD (திவ்யதர்ஷினி)
தனது திருமணம் குறித்த தகவலை தனது டிவீட்டர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டுள்ளார்.
தனது 5 ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை ஜூன் மாத இறுதியில் கரம்
பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட
திருமணம் என்றும் தெரிவித்துள்ள DD, ஸ்ரீகாந்த் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக
பணியாற்றியதாகவும், மேலும் விரைவில் படங்கள் இயக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்தை “ஹாய் மாமா” என்று கூப்பிடுவதாகவும், ஜாலியான, கேரிங்கான ஸ்ரீகாந்த்
தன்னுடைய வாழ்க்கை துணையாக் அமைந்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் ரசிகர்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் புதுமண
தம்பதிகளுக்கு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.